ஈரோடு பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட விஜய்


ஈரோடு பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட விஜய்
x

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.

ஈரோடு

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு வந்த விஜய்க்கு, வழிநெடுக தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். ஆவேசமாக பேசிய விஜய், தனது உரையை முடித்ததும் பிரசார வாகனத்தில் இருந்தபடியே தொண்டர்களுடன் செல்பி வீடியோ எடுத்தார். தொடர்ந்து அவருக்கு தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தார்.

இந்த நிலையில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "நன்றி ஈரோடு" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


1 More update

Next Story