விஜயகாந்தை போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் - டிடிவி தினகரன் பேட்டி


விஜயகாந்தை போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் - டிடிவி தினகரன் பேட்டி
x

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற அ.ம.மு.க நிர்வாகி இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:-

எப்படி மறைந்த விஜயகாந்த், 2006 தேர்தலின்போது தாக்கத்தை கொடுத்தாரோ, அதேபோல வருகிற 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன். அனைத்து கட்சிகளுக்குமே பாதிப்பை உருவாக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்.

நான் செல்வது யதார்த்தம். அதற்காக அவருடன் கூட்டணிக்குச் செல்கிறேன் என்று அர்த்தமல்ல. பல இடங்களில் நண்பர்கள் மற்றும் பல்வேறு கருத்துக்கணிப்புகள் இதையே சொல்கின்றன. அதைத்தான் நான் சொல்கிறேன். ஒவ்வொரு கட்சியுமே தாங்கள் இடம்பெறும் அணி வெற்றி பெறும் என்று சொல்வது சாதாரணமானதுதான்.

அ.ம.மு.க. தொடங்கி 8 ஆண்டுகள் முடிந்து 9-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக மீண்டும் பிரதமராக மோடி வந்தால் இந்தியா வளர்ச்சி பெறும் என்று கருதி எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்றோம். தற்போதும் அந்தக் கூட்டணியில்தான் உள்ளோம். டிசம்பருக்கு பிறகுதான் எங்கள் கூட்டணி இறுதி வடிவம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story