மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,500 கன அடியாக சரிவு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,500 கன அடியாக சரிவு
x

அணையில் இருந்து கால்வாய் வழியே விநாடிக்கு 15,500 கன அடி நீர் டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

சேலம்

வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதனால் ஏரிகள், அணைகள் உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் விரைவாக நிரம்பி வருகின்றன. 93.47 டி.எம்.சி. முழுகொள்ளளவு கொண்ட இந்த அணை நடப்பு ஆண்டில் இதுவரை 7 முறை நிரம்பி சாதனை படைத்திருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நடப்பு ஆண்டு அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், ஓராண்டுக்கும் மேல் 100 அடிக்கு மேல் தண்ணீர் நின்று கொண்டேயிருக்கிறது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,500 கன அடியில் இருந்து 15,500 கன அடியாக சரிந்துள்ளது.

அணை முழு கொள்ளளவுடன் உள்ள நிலையில் கால்வாய் வழியே விநாடிக்கு 15,500 கன அடி நீர் டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

1 More update

Next Story