ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு
Published on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும், கர்நாடகா, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இரு அணைகளிலும் இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 50,000 கன அடியில் இருந்து 57,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com