திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - தமிழக அரசு உத்தரவு

8 நாட்களில், 240 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

திருமூர்த்தி அணையில் இருந்து நாளை முதல் 25-ந்தேதி தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து, பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சரகம் 86.900 கிலோ மீட்டரில் உள்ள கள்ளிபாளையம் நீர் வெளிப்போக்கி (Outlet) வழியாக, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், உத்தமபாளையம் கிராமத்தில் உள்ள வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்திற்கு 18.12.2025 முதல் 25.12.2025 வரை 8 நாட்களில், 240 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட), பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக, தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com