வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை அனுமதி


வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை அனுமதி
x

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு செயலாளர் (நீர்வளத்துறை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

27.10.2025 முதல் 31.10.2025 வரை வைகை பூர்வீக பாசன பகுதி-III-ற்கு 5 நாட்களுக்கு 624 மி.க.அடியும், 02.11.2025 முதல் 06.11.2025 வரை வைகை பூர்வீக பாசன பகுதி-II-ற்கு 5 நாட்களுக்கு 772 மி.க.அடியும், 08.11.2025 முதல் 13.11.2025 வரை வைகை பூர்வீக பாசன பகுதி-I-ற்கு 6 நாட்களுக்கு 428 மி.க.அடியும் ஆக மொத்தம் 1,824 மி.க.அடி தண்ணீரினை வைகை அணையிலிருந்து திறந்து விடவும், மேலும் மார்ச் 2026 வரை வைகை அணையில் வைகை பங்கீட்டு நீர் 1,354 மி.க.அடி எட்டும் போதெல்லாம் வைகை பூர்வீக பாசனப் பகுதி I, II மற்றும் III-ற்கு தண்ணீர் திறப்பு விதிகளின்படி 2:3:7 என்ற விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரினை வைகை அணையிலிருந்து திறந்துவிட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story