மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
x

வடமாநிலத்தோருக்கு வாக்குரிமை வழங்கினால் மக்கள் புரட்சி வெடிக்கும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ளம் தேடி இல்லம் நாடி தேர்தல் பிரசாரத்திற்காக வந்துள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிந்து பாரம்பரிய இசைக்கு அவர்களுடன் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார். அதனை தொடர்ந்து

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வடமாநிலத்தோருக்கு வாக்குரிமை வழங்கினால் மக்கள் புரட்சி வெடிக்கும். வடநாட்டினர் இங்கு (தமிழ்நாடு) வாருங்கள்.. வேலை பாருங்கள்.வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.ஆனால் வாக்குரிமை என்பது அவரவர் பிறந்த மாநிலத்தில்தான் இருக்க வேண்டும். வெறும் மாநிலங்களவை சீட்டுக்காக கூட்டணி அமைக்க மாட்டோம். தொண்டர்கள், மக்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும். இந்த வெற்றியை கேப்டன் காலடியில் கொண்டுபோய் சேர்ப்போம்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் தொற்சாலைகள் வர வேண்டும். வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். 2026-க்கு பிறகு கேப்டனின் கனவுகள், லட்சியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story