தொடர்மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா உழவர்களைக் காப்போம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொடர்மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா உழவர்களைக் காப்போம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

#டெட்வா புயல் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம்

அக்டோபர் தொடங்கி, தற்போது வரையிலான #வடகிழக்கு பருவமழை கனமழையினால் சேதமடைந்துள்ள நெற்பயிர்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் & வீடுகள், மனித உயிரிழப்புகள், கால்நடை பலி ஆகியவற்றுக்கு உடனடியாக மாநிலப் பேரிடர் நிதியில் (SDRF) இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அனைத்து இடங்களிலும் நீரை வடிய வைக்கும் பணிகளைத் தொடர்ந்து நேரடியாகக் கண்காணித்து வருகிறேன்.

முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும், மக்களைக் காக்கும்

என அதில் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com