கோவை வழியாக செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்கு நல்ல வரவேற்பு


கோவை வழியாக செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்கு நல்ல வரவேற்பு
x
தினத்தந்தி 12 Nov 2025 2:09 AM IST (Updated: 12 Nov 2025 5:56 AM IST)
t-max-icont-min-icon

புதிய ரெயில் சேவை நேற்று முதல் வழக்கம்போல் இயங்க தொடங்கியது.

கோவை,

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கோவை வழியாக வந்தே பாரத் புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த புதிய ரெயில் சேவை நேற்று முதல் வழக்கம்போல் இயங்க தொடங்கியது.

இந்த ரெயிலில் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்கு முடியும். அதன்படி எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு வரும், இந்த ரெயிலில் கோவையில் இருந்து பெங்களூரு செல்ல இந்த மாதம் 30-ந் தேதி வரை பெரும்பாலும் காத்திருப்போர் பட்டியல் தான் உள்ளது. எனவே இந்த ரெயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. மேலும் எர்ணாகுளத்தில் இருந்தும் இந்த மாதம் முழுவதும் பெரும்பாலான நாட்கள் காத்திருப்போர் பட்டியலே காணப்படுகிறது.

1 More update

Next Story