ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? 'உதயசூரியன்' - மு.க.ஸ்டாலின் பேச்சு


ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் - மு.க.ஸ்டாலின் பேச்சு
x

மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றிணைந்து நிற்போம் என மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;

"ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல. தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி. ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? நாம் உதயசூரியன்.

நம்மை அணைக்க நினைத்தால் நம் மண், மொழி, மானத்தை காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம். இது தான் தமிழர்களின் தனி குணம். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான். வாட்ஸ் அப், எக்ஸ் தளம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற லோகோவை டிபி (DP) ஆக கட்டாயமாக வைக்க வேண்டும்"

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story