தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே...?

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களிலும் 14,141 ஏரிகள் உள்ளன.
சென்னை,
தமிழகத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி மழை பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
விழுப்புரம் மாவட்டம் வானூர் - 18.4 செ.மீ., விழுப்புரம் - 16.8 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை - 16.7 செ.மீ., கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரி - 16.6 செ.மீ., வாணமாதேவி - 16.5 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் விடூர் - 16.1 செ.மீ., கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு - 13 செ.மீ., பரங்கிப்பேட்டை - 12.5 செ.மீ., புவனகிரி - 12.3 செ.மீ.,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி - 12.3 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் ஆவடி 11.7 செ.மீ., திருவாலங்காடு - 11.2 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் 10.3 செ.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் களவாய் - 9.94 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் - 9.82 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் - 9.4 செ.மீ.,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி - 9 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் எலிஸ் அணைக்கட்டு - 9 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி - 8.9 செ.மீ., காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் - 8.84 செ.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு - 8.83 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் தண்டறை அணைக்கட்டு - 8.6 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 8.5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இதேபோல், 98 இடங்களில் 4 மி.மீ. வரை மழை பதிவாகியுள்ளது.
ஏரிகளின் நீர் இருப்பு விவரம்:-
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களிலும் 14,141 ஏரிகள் உள்ளன. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,040 ஏரிகளும், குறைவாக நீலகிரி மாவட்டத்தில் ஏரிகள் எதுவும் இல்லை. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, இந்த ஏரிகள் எவ்வளவு நிரம்பியுள்ளன என்பதை பார்ப்போம்.
அதன் விவரம் வருமாறு:-
100 சதவீதம் நிரம்பியவை - 1,522. 76 முதல் 99 சதவீதம் நிரம்பியவை - 1,842. 51 முதல் 75 சதவீதம் நிரம்பியவை - 2,253. 26 முதல் 50 சதவீதம் நிரம்பியவை - 3,370. 1 முதல் 25 சதவீதம் நிரம்பியவை 4,534. கொஞ்சம்கூட நிரம்பாதவை - 620.






