அஜித்குமாரை சித்திரவதை செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி


அஜித்குமாரை சித்திரவதை செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
x

கோப்புப்படம் 

அஜித்குமாரின் விவகாரத்தில் காவலர்களுக்கு உத்தரவிட்ட உயரதிகாரி யார் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

சென்னை

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு தமிழக அரசு மாற்றியுள்ளது. எதிர்க்கட்சிகள், அஜித்குமாரின் விவகாரத்தில் காவலர்களுக்கு உத்தரவிட்ட உயரதிகாரி யார் என கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்திரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விட்டாலும் தமிழகக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story