டி.டி.வி.தினகரனுடன் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு: அ.ம.மு.க.வில் இணைய திட்டமா?


டி.டி.வி.தினகரனுடன் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு: அ.ம.மு.க.வில் இணைய திட்டமா?
x

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அய்யப்பன் ஓ.பன்னீர்செல்வத்துடன் பங்கேற்றார்.

மதுரை,

அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்ட பிறகு, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோர் இருந்து வந்தனர்.

ஆனால், வர இருக்கின்ற சட்டசபை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுப்பதில் தடுமாற்றத்தில் இருந்ததால், ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். மனோஜ் பாண்டியனும், வைத்திலிங்கமும் தி.மு.க.வில் ஐக்கியமாகிவிட, அய்யப்பன் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இருந்து வந்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்திலும் அவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பங்கேற்றார்.

இந்த நிலையில், இன்று மதுரை கோச்சடையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை, அய்யப்பன் திடீரென சந்தித்து பேசினார். இதனால், அவர் அ.ம.மு.க.வில் இணையப் போகிறாரா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சந்திப்புக்கு பிறகு, டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் என்னை சந்தித்தார். அரசியல் ரீதியாக வரவில்லை. எனக்கு நல்ல நண்பர். மீண்டும் வந்து சந்திப்பதாக கூறிச் சென்றிருக்கிறார். 3 முறை முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் எப்படி தி.மு.க.வுக்கு செல்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story