டெல்லி செல்லாதது ஏன்? அண்ணாமலை விளக்கம்


டெல்லி செல்லாதது ஏன்? அண்ணாமலை விளக்கம்
x

அமித்ஷா தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லாதது ஏன்? என்பது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர்களை டெல்லி மேலிடம் அவசரமாக அழைத்து ஆலோசனை நடத்தியது. அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை .

தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இன்று நடைபெற்ற இந்த மிக முக்கியமான கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது: - அதிகமான திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் இன்று டெல்லி செல்லவில்லை”என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story