பா.ம.க.வில் காந்திமதிக்கு பதவியா? போக போக தெரியும் என ராமதாஸ் பதில்


பா.ம.க.வில் காந்திமதிக்கு பதவியா? போக போக தெரியும் என ராமதாஸ் பதில்
x

கடந்த சில தினங்களுக்கு முன்பாக பா.ம.க .செயற்குழு கூட்டத்தில் தங்களது மகள் காந்திமதி கலந்து கலந்து கொண்டுள்ளார் .

விழுப்புரம்,

பா.ம.க. சார்பாக கும்பகோணத்தில் நடைபெறும் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனதலைவர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து இன்று காலை புறப்பட்டார். அப்போது அவரிடம் பூம்புகார் மாநாட்டிற்கு டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என கேட்ட கேள்விக்கு சிறிது நேரம் அமைதியாக இருந்த டாக்டர் ராமதாஸ் பிறகு தெரிவிக்கிறேன் என கூறினார்

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பா.ம.க .செயற்குழு கூட்டத்தில் தங்களது மகள் காந்திமதி கலந்து கலந்து கொண்டுள்ளார் . இது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது. குடும்பத்தினர்கள் யாரும் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என நீங்கள் சொல்லி உள்ளீர்கள் எனக் கேட்ட கேள்விக்கு ஏற்கனவே எங்கள் குடும்பத்திலிருந்து கலந்து உள்ளார்கள். தங்கள் மகள் காந்திமதிக்கு பா.ம.க.வில் பொறுப்பு வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு போக போக தெரியும் என சினிமா பாடலை பாடி அங்கிருந்து கிளம்பி சென்றார்.

1 More update

Next Story