திருமணமானதை மறைத்து நர்சிங் மாணவியை காதலித்து உல்லாசம் - போக்சோவில் வாலிபர் கைது

நர்சிங் மாணவியை காதலித்து உல்லாசம் அனுபவித்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திருமணமானதை மறைத்து நர்சிங் மாணவியை காதலித்து உல்லாசம் - போக்சோவில் வாலிபர் கைது
Published on

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா கீழப்பனையூரை சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மகன் யோகேஸ்வரன் (25 வயது). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் மன்னார்குடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதல் ஆண்டு நர்சிங் படித்து வந்தா. கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்த மாணவியிடம் யோகேஸ்வரன் காதல் வசனம் பேசி, தனக்கு திருமணமானதை மறைத்து, அவரை தனது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த பெண்ணின் தந்தை திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து யோகேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com