நெல்லையில் இளைஞர் அடித்துக் கொலை - இருவரை கைது செய்து விசாரணை


நெல்லையில் இளைஞர் அடித்துக் கொலை - இருவரை கைது செய்து விசாரணை
x
தினத்தந்தி 8 April 2025 8:20 AM IST (Updated: 8 April 2025 10:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுன் பகுதியில் 20 வயது இளைஞர் அடித்து கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை,

நெல்லை டவுன் சாலியர் தெரு குருநாதர் கோவில் அருகில் உள்ள காட்டு பகுதியில் நேற்று நள்ளிரவில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடல் புதைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதா, வினோத் சாந்தாராம், மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். வாலிபர் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் உடலை தோண்டி எடுக்க ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் சிவா, விஷால் ஆகிய இருவரை கைது செய்தனர். காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story