காதலி பேச மறுத்ததால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு

கோப்புப்படம்
காதலன், காதலி இடையே இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.
குமரி,
குமரி மாவட்டம் முளகுமூடு அண்டுருட்டி விளை பகுதியை சேர்ந்த ஜான்ரோஸ் மகன் ஜெனிஷ் பிரதீப் (வயது 27), கொத்தனார். இவர் கடந்த 10 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்தநிலையில் காதலன், காதலி இடையே இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.
கடந்த 3 நாட்களாக காதலி, ஜெனிஷ் பிரதீப்பிடம் பேசவில்லையாம். அவர் எவ்வளவோ பேச முயன்றும் காதலி தவிர்த்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த ஜெனிஷ் பிரதீப் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Related Tags :
Next Story






