நள்ளிரவில் வீடு, வீடாக சென்று கதவை தட்டிய இளம்பெண்: போலீசார் விளக்கம்

நள்ளிரவில் பெண் உதவி கேட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பெண் ஒருவர் நேற்று வீடு வீடாக சென்று கதைவை தட்டினார்.அந்தப் பெண் உண்மையாகவே உதவி கேட்டு வந்தாரா இல்லை திருடுவதற்கான திட்டமா என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். வீட்டின் உரிமையாளர்கள் யாரும் கதவை திறக்கவில்லை. பெண் உதவி கேட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள காவல்துறையினர், "கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறால் அந்த பெண் உதவி கேட்டு வந்துள்ளார். உறவினர்கள் தாக்கியதில் காயமடைந்த அந்த பெண், மருத்துவமனைக்கு செல்லும்போது வீட்டு கதவுகளை தட்டி உதவி கேட்டுள்ளதாக" கூறியுள்ளனர். தற்போது அப்பெண் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் சமூக வலைதளங்களில் பரவும் இந்த வீடியோ பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






