கடன் பிரச்சினையில் அரிவாள் வெட்டு: வாலிபர் கைது


கடன் பிரச்சினையில் அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
x

நெல்லையில் வாலிபர் ஒருவர், தனது நண்பரின் செல்போனில் தொடர்பு கொண்டு மற்றொரு வாலிபரின் மாமியார் வாங்கிய கடனை திருப்பி கேட்டுள்ளார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு அருகேயுள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஹரி (வயது 18), அவருடைய நண்பரான பாலாஜி என்பவரை பார்க்க சி.என்.கிராமம் சென்றுள்ளார். அப்போது பாலாஜி, ஹரியின் செல்போனில் இருந்து, டவுண் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் மகன் பாஞ்சாலராஜன்(33) என்பவருடைய மாமியாரிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளார்.

இந்த நிலையில் சி.என்.கிராமம் அருகே நின்று கொண்டிருந்த ஹரி, அவருடைய நண்பர் பாலாஜி, இசக்கிபாண்டி ஆகியோரை வழிமறித்த பாஞ்சாலராஜன், அவர்களை அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி அரிவாளை கொண்டு தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் ஹரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாஞ்சாலராஜனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

1 More update

Next Story