திருமணம் செய்ய வற்புறுத்தி பெண் மீது தாக்குதல்: வாலிபர் கைது


திருமணம் செய்ய வற்புறுத்தி பெண் மீது தாக்குதல்: வாலிபர் கைது
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 19 July 2025 7:21 AM IST (Updated: 19 July 2025 7:48 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை திட்டி, தாக்கியதுடன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபர் மிரட்டியுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் பிரவீன் குமார் (25 வயது). திண்டிவனம் பகுதியில் 'டாட்டூ' போடும் கடை வைத்துள்ளார். இவரும் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணும், பேசி பழகி வந்துள்ளனர். இதனிடையே இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பெண், பிரவீன் குமாரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனால் பிரவீன் குமார் செல்போன் மூலமாகவும், நேரிலும் அந்த பெண்ணை திட்டி, தாக்கியதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமாரை கைது செய்தனர்.

1 More update

Next Story