தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, பெரம்பூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com