4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு


4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 26 Oct 2025 8:12 AM IST (Updated: 26 Oct 2025 8:13 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

வடகிழக்கு பருவமழையின் முதல் நிகழ்வு புயல் சின்னமாக மாறாமல் ஏமாற்றிய நிலையில், 2-வது நிகழ்வு தற்போது வலுவடைந்து வருகிறது. அந்தவகையில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது.

அதனைத் தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவெடுக்கிறது. இதற்கு ஏற்கனவே அட்டவணையில் தாய்லாந்து நாடு பரிந்துரைத்த ‘மோன்தா' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. மேலும் இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தீவிர புயலாகவும் வலுவடையக் கூடும்.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story