9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com