சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
சென்னை,
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், சென்னையின் ஒருசில பகுதிகளில் இன்று காலை லேசான மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மந்தைவெளி, அடையாறு, வடபழனி, ஓ.எம்.ஆர். சாலை, கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது
Related Tags :
Next Story