சென்னையில் அதி கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்


சென்னையில்  அதி கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 30 Nov 2024 4:31 PM IST (Updated: 30 Nov 2024 4:33 PM IST)
t-max-icont-min-icon

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

பெஞ்சல் புயல் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. சென்னையை பொறுத்தவரை, நள்ளிரவு முதல் மதியம் வரை விடாமல் மழை கொட்டித்தீர்த்தது. மதியம் 2 மணியில் இருந்து 4 மணி வரை குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்புள்ள மாவட்டங்கள்;

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story