ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது


ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது
x

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றாழுத்தாழ்வு பகுதியானது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்ட நிலையில், முதல் சுற்று மழை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் வங்கக்கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மட்டுமே வலுப்பெற்றது. அதேநேரம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையவில்லை.

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்த போதிலும் பெரிய அளவில் மழை இல்லை. இதனிடையே வலு குறைந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியதால் மழைப்பொழிவு குறைந்து விட்டது.

இந்நிலையில் வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. வங்கக் கடலில் இன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 26ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, 27ம் தேதி புயலாக வலுப்பெறும் எனவும் வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒருவேளை கணிப்பின்படியே ஆந்திரா நோக்கி சென்றால் தமிழகத்துக்கு மழை பாதிப்பு இருக்காது. ஆனால் சென்னை அருகே கடந்து ஆந்திராவை நோக்கி சென்றால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நாளை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், 27-ந்தேதி ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 28-ந் தேதி ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story