இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
Published on

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதன்படி , செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் , விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com