தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு உள்ளதா? வானிலை ஆய்வாளர்கள் தகவல்


தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு உள்ளதா? வானிலை ஆய்வாளர்கள் தகவல்
x

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சென்னை

தமிழ்நாட்டில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) வறண்ட வானிலையுடன் வெப்பமான சூழலே நிலவும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வருகிற 2-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் மீண்டும் வெப்பசலன மழை தொடரும் எனவும், வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வருகிற 2, 3, 4, 5, 6 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாலை, இரவு அல்லது நள்ளிரவு இடி, மின்னலுடன் கூடிய வெப்பச்சலன மழை தீவிரம் அடைந்து மழைப்பொழிவை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் புதுச்சேரியிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது.

1 More update

Next Story