48 மணிநேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம் - வானிலை ஆய்வு மையம்


48 மணிநேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம் - வானிலை ஆய்வு மையம்
x

வடகிழக்கு பருவமழை 3 மாதங்களுக்கு பெய்யக்கூடும்.

சென்னை,

நடப்பு ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணிநேரத்தில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு அதிகபடியான மழையை தரக்கூடிய பருவமழையாக வடகிழக்கு பருவமழை உள்ளது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு பெய்யக்கூடும்.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், நடப்பு ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணிநேரத்தில் (2 நாட்களில்) தொடங்கும் என தெரிவித்திருந்தது.

முன்னதாக வடகிழக்கு பருவமழை வரும் 16 அல்லது 18ம் தேதிவாக்கில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதேவேளை, 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை வங்கக்கடலின் மத்திய மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் தொடங்கும். 2 நாட்களில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை நாட்கள் செல்ல செல்ல தீவிரமடையும். தென்தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடதமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,, வேலூர் போன்ற பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story