இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?


இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
x

நெல்லை, தூத்துக்குடி உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது

சென்னை

சவுராஷ்டிரா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன் தினம் அரபிக்கடல் பகுதிகளுக்கு நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை சக்தி புயலாக வலுப்பெற்று குஜராத்தின் துவாரகாவில் இருந்து மேற்கு - தென்மேற்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் நிலைப்பெற்றுள்ளது.

இந்த சக்தி புயல் அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் சற்று நகர்ந்து பிறகு மேற்கு - தென்மேற்கே நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

அது நாளை மறுதினம் வரை மேற்கு - தென்மேற்கே மேலும் நகர்ந்து வடக்க்கு அரப்பிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இரவு 10 மணிவரை தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story