சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்


சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
x

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

சென்னை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் பெய்யக்கூடும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளை, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனிடையே, சென்னையில் அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர், எம்.ஆர்.சி. நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை நீடிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீடிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story