சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
சென்னை,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை நகர்ப்புற பகுதிகளிலும், வடசென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் தற்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி தி.நகர் மாம்பலம், அன்னாசாலை தேனாம்பேட்டை, காட்டுப்பாக்கம் திருவேற்காடு, ஆவடி, திருமுல்லைவாயல், தொழிற்பேட்டை, போரூர் வளசரவாக்கம், வானகரம், மதுரவாயல், ஐயப்பந்தாங்கல், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், பட்டாபிராம், மாங்காடு, குன்றத்தூர், அம்பத்தூர், கொரட்டூர், பாடி, சென்ட்ரல், எழும்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.






