சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
சென்னை,
தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், நிக்கோபார் தீவு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ம் தேதி வாக்கில் துவங்கக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் , சென்னை பூவிருந்தவல்லி , ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கடுமையான வெயிலுக்கு நடுவே சிறிது நேரம் குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story






