அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி

படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் நாளுக்குநாள் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் அந்நாட்டின் பிலடெல்பியா மாகாணம் லெமன் ஹில்ஸ் டிரைவ் பகுதியில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் நேற்று இரவு இளைஞர்கள் பலர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இளைஞர், இளம்பெண் என 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். மேலும், இந்த துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






