போதை பொருள் விவகாரம்: 25 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழந்திருப்பார்கள் - டிரம்ப் சொல்கிறார்

கரீபியன் தீவு பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த அதிநவீன நீர் மூழ்கி கப்பல் குண்டு வீசி தகர்க்கப்பட்டது.
வாஷிங்டன்,
கரீபியன் தீவு பகுதியில் இருந்து அமெரிக்கா நோக்கி உயர்ரக போதைப்பொருட்களை கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலை அமெரிக்க ராணுவம் குண்டுவீசி தகர்த்ததாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். இதுகுறித்து டுரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவை நோக்கி வந்து கரீபியன் தீவு பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த அதிநவீன நீர் மூழ்கி கப்பல் குண்டு வீசி தகர்க்கப்பட்டது. இது எனக்கு மிக்பெரிய கவுரவம்.
இந்த கப்பலில் உயர்ரக போதைப்பொருளான பெண்டானைல் கடத்தப்பட்டிருந்ததாக உளவுத்துறையினர் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இருவர் உயிருடன் மீட்கப்பட்டு ஈகுவடார் மற்றும் கொலம்பியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பல் மட்டும் அமெரிக்காவுக்குள் நுழைந்து இருந்தால் 25 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழந்திருப்பார்கள்” என தெரிவித்தார்.






