ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு


ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு
x

நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

டோக்கியோ,

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். சில இடங்களில் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

ஜப்பானின் மேற்கு கடலோரபகுதிகளில் இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் இந்த பிராந்தியத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. அந்த பாதிப்பில் இருந்தே இன்னும் முழுமையாக மீளாத நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story