ஜோர்டான் பயணத்தை முடித்துவிட்டு, எத்தியோப்பியா சென்றடைந்தார் பிரதமர் மோடி

எத்தியோப்பியா பிரதமரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ளார்.
ஜோர்டான் பயணத்தை முடித்துவிட்டு, எத்தியோப்பியா சென்றடைந்தார் பிரதமர் மோடி
Published on

அட்டிஸ் அபாபா,

பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.. முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு, அந்நாட்டின் மன்னர் அப்துல்லா-II முன்னிலையில் நடைபெற்ற இந்தியா - ஜோர்டான் முதலீட்டாளர் சந்திப்பில் உரையாற்றினார். முன்னதாக, இந்தியா - ஜோர்டான் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த நிலையில், ஜோர்டான் பயணத்தை முடித்துவிட்டு, பிரதமர் மோடி எத்தியோபியா சென்றடைந்தார். எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலியின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ளார். பிரதமரை எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி வரவேற்றார்.

எத்தியோப்பிய பயணத்தின்போது, இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலியுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார். இந்த பயணத்தின் போது இந்திய புலம்பெயர்ந்தோரையும் பிரதமர் சந்திக்க உள்ளார். எத்தியோப்பிய பயணத்தை முடித்த பின்னர் பிரதமர் மோடி, ஓமன் நாட்டுக்கு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com