அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 5 பேர் பலி


அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 5 பேர் பலி
x

படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் மேன்ஹாட்டன் நகரில் பார்க் அவன்யூ பகுதியில் 44 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு முக்கிய நிதி நிறுவனங்களில் அலுவலகங்கள், தேசிய கால்பந்து லீக்கின் அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இந்நிலையில், இந்த கட்டிடத்திற்குள் நேற்று மாலை 6 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) துப்பாக்கியுடன் மர்ம நபர் புகுந்தார். அந்த நபர் கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் போலீஸ் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். பின்னர், துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர் நெவாடா மாகாணத்தை சேர்ந்த ஷேன் தம்ரா என்பதை கண்டுபிடித்தனர். இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story