ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமில் கூட்ட நெரிசல் - 6 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கானா.
அக்ரா,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கானா. இந்நாட்டின் தலைநகர் அக்ராவில் உள்ள எல் - வாக் விளையாட்டு அரங்கில் நேற்று ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விளையாட்டு அரங்கில் குவிந்தனர்.
அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 22 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பின்மை காரணமாக குறைவான எண்ணிக்கையிலான ஆள் சேர்ப்பு முகாம்களுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிவதால் கூட்ட நெரிசல் போன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story






