பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை நீட்டிப்பு


பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை நீட்டிப்பு
x

ஜனவரி 23-ந் தேதி வரை தடையை நீட்டிப்பதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்,

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கு தடைவிதித்தது.

இந்த நிலையில் இந்த தடை வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இதனை ஜனவரி 23-ந் தேதி வரை நீட்டிப்பதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story