பாகிஸ்தானில் பஸ்-லாரி மோதி விபத்து - 10 பேர் உயிரிழப்பு

விபத்தில் படுகாயம் அடைந்த 8 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாண நெடுஞ்சாலையில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. வடக்கு வசிரிஸ்தான் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே சென்ற பஸ் மீது மோதியது. இதில் அந்த பஸ் அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 8 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கைபர் பக்துங்க்வா மாகாண முதல்-மந்திரி அலி அமீன் காந்தாபூர் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story