டிட்வா புயல் பாதிப்பு: பேரிடரை எதிர்கொள்ள இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட இயற்கை பேரிடரை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு அவசரகால நிலையை பிரகடனம் செய்தது.
டிட்வா புயல் பாதிப்பு: பேரிடரை எதிர்கொள்ள இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்
Published on

கொழும்பு,

டிட்வா புயலால் இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவு காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டிட்வா புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. 130-க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளனர்.

அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. புயல் சேதாரம் கடுமையாக இருப்பதால் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. மழை, வெள்ளத்தின் போது, கலாயோ பகுதியில் பஸ் ஒன்றில் சிக்கிய 68 பேரை இலங்கை ராணுவத்தினர் காப்பாற்றி உள்ளனர். டிட்வா புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்வதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com