வெனிசுலா வான்பரப்பை பயன்படுத்த வேண்டாம்; விமான நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை

கரீபியன் கடற்பரப்பில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
வெனிசுலா வான்பரப்பை பயன்படுத்த வேண்டாம்; விமான நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை
Published on

வாஷிங்டன்,

வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கடல் வழியாக படகில் போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாகவும், அந்த கும்பல்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.

மேலும், போதைப்பொருள் கடத்தலை தடுக்க வெனிசுலா மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், வெனிசுலா அருகே கரீபியன் கடலில் அதிக அளவிலான போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் நீர்மூழ்கி கப்பல்களையும், படை வீரர்களையும் அமெரிக்கா நிலை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் வெனிசுலா மீது அமெரிக்கா எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், வெனிசுலா வான்பரப்பை விமான நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரப்ம் எச்சரிக்கை விடுத்துள்ளார். விமானங்கள் வெனிசுலா வான்பரப்பை பயன்படுத்த வேண்டாம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் வெனிசுலா மீது விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என அச்சம் எழுந்துள்ளது. இதனால், கரீபியன் கடற்பரப்பில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com