உக்ரைனுக்கு 90 பில்லியன் யூரோ நிதியுதவி - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்


உக்ரைனுக்கு 90 பில்லியன் யூரோ நிதியுதவி - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
x

அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரசல்ஸ்,

ரஷியா உடனான போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலதன சந்தையில் இருந்து 90 பில்லியன் யூரோ நிதி திரட்டி, அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லெயன் தெரிவித்துள்ளார். அதே சமயம் ரஷியா போர் இழப்பீடுகளை தரும் பட்சத்தில், ஐரோப்பிய நாடுகளிடம் பெற்ற கடனை உக்ரைன் திருப்பி செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story