அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து ; தந்தை - மகள் பலி

விமானம் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாஷிங்டன்,
கரீபியன் தீவு நாடான ஜமைக்காவை கடந்த 28ம் தேதி மெலிசா புயல் தாக்கியது. இந்த புயலால் ஜமைக்கா பெரும் பாதிப்பை சந்தித்தது. புயலால் பாதிக்கப்பட்ட பலரும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஜமைக்காவுக்கு மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது. அந்த வகையில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அலெக்சாண்டர் (வயது 53), அவரது மகள் செரினா (வயது 22) இருவரும் ஜமைக்காவுக்கு மனிதாபிமான உதவிகள் செய்ய முன்வந்தனர்.
அதன்படி, பல்வேறு நிவாரண பொருட்களுடன் நேற்று அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து சிறிய ரக விமானத்தில் இருவரும் புறப்பட்டுள்ளனர். விமானத்தை அலெக்சாண்டர் ஓட்டியுள்ளார்.
இந்நிலையில், விமானம் புளோரிடாவின் கரொல் ஸ்பிரிங் பகுதியில் சென்றபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அலெக்சாண்டர் அவரது மகள் செரினா இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






