ஜெர்மனி: எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோடரியால் தாக்குதல்; ஒருவர் காயம்


ஜெர்மனி: எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோடரியால் தாக்குதல்; ஒருவர் காயம்
x

ஜெர்மனியின் முனிச் நகர போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று அந்நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெர்லின்,

ஜெர்மனி நாட்டின் தெற்கு பகுதியில் ஐ.சி.இ. எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. நீண்ட தூரம் செல்ல கூடிய அந்த ரெயில், ஸ்டிராபிங் மற்றும் பிளாட்லிங் பகுதிகளுக்கு இடையே சென்றது.

அப்போது பவாரியா என்ற பகுதியில் ரெயில் இன்று சென்றபோது, திடீரென பயணி ஒருவர் எழுந்து தன்னிடம் வைத்திருந்த கோடரியால் சுற்றியிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில், ஒருவர் காயம் அடைந்து உள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து, முனிச் நகர போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர். அந்நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென உடனடியாக தெரிய வரவில்லை. வேறு எந்த விசயங்களையும் போலீசார் வெளியிடவில்லை.

1 More update

Next Story