தாய்லாந்தில் கனமழை: 36 லட்சம் பேர் பாதிப்பு; 145 பேர் பலி

தாய்லாந்தில் கனமழை எதிரொலியாக சாங்கிலா மாகாணத்தில் மட்டுமே 110 பேர் பலியாகி உள்ளனர்.
தாய்லாந்தில் கனமழை: 36 லட்சம் பேர் பாதிப்பு; 145 பேர் பலி
Published on

பாங்காக்,

தாய்லாந்து நாட்டில் பெய்து வரும் கனமழையால் தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் 12 தெற்கு மாகாணங்களை சேர்ந்த 36 லட்சம் பேர் தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கனமழையால் 12 லட்சம் வீடுகளை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவிலும் பல வீடுகள் இடிந்து விழுந்தன. பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கார்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. அவை ஒன்றன் மீது ஒன்றாக கிடப்பதுடன், நீரோட்டத்தில் அடித்தும் செல்லப்பட்டு உள்ளன.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தாய்லாந்தில் கனமழை எதிரொலியாக ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி 145 பேர் பலியாகி உள்ளனர். இவற்றில் சாங்கிலா மாகாணத்தில் மட்டுமே 110 பேர் பலியாகி உள்ளனர் என அரசு செய்தி தொடர்பாளர் சிரிபோங் ஆங்காசகுலுகியாத் கூறியுள்ளார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com