இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து விடும் - டிரம்ப்


இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து விடும் - டிரம்ப்
x
தினத்தந்தி 23 Oct 2025 3:55 PM IST (Updated: 23 Oct 2025 5:26 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே ரஷிய எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்த போவதாக பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்ததாக டிரம்ப் தெரிவித்தார். அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. ஆனாலும் டிரம்ப் அந்த கருத்தை மீண்டும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷிய எண்ணை வாங்குவதை இந்தியா குறைத்துவிடும் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். அவர் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தபோது

கூறியதாவது:-

ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதை நிறுத்த போவதாக இந்தியா என்னிடம் கூறி உள்ளது. இது ஒரு செயல்முறையில் இருந்து வருகிறது. இதை உடனே செய்துவிட முடியாது. இந்த ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட ரஷிய எண்ணையை வாங்குவதை இந்தியா குறைத்து விடும். நேற்று பிரதமர் மோடியிடம் பேசினேன். அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றார்.

1 More update

Next Story