கனடாவில் இந்திய நாட்டை சேர்ந்த நபர் கத்தியால் குத்தி படுகொலை


கனடாவில் இந்திய நாட்டை சேர்ந்த நபர் கத்தியால் குத்தி படுகொலை
x

கனடாவில் இந்திய நாட்டை சேர்ந்த நபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சந்தேகத்திற்குரிய நபர் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

ஒட்டாவா,

கனடாவின் ஒட்டாவா நகரருகே ராக்லேண்ட் பகுதியில் இந்திய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் மர்ம நபரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்டதற்கான காரணம் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

இதுபற்றி இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், கத்தி குத்து தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியான சோக சம்பவத்திற்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்.

சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார் என போலீசார் குறிப்பிட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது. எனினும், பாதிக்கப்பட்ட நபர் அடையாளம் காணப்படவில்லை.

இந்த சம்பவத்தில் பலியானவரின் குடும்பத்தினருக்கு, உள்ளூர் கூட்டமைப்பு வழியே சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளையும் வழங்க, நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறோம் என்றும் தூதரக தகவல் தெரிவிக்கின்றது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்புக்கு கவலை கொள்ளுமளவுக்கு தேவையேதும் ஏற்படவில்லை என ஒன்டாரியோ மாகாண போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை தொடக்க நிலையிலேயே உள்ளது. வெளியிடுவதற்கு வேறு எந்த தகவலும் இல்லை என போலீசார் கூறினர் என்று சி.டி.வி. நியூஸ் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

1 More update

Next Story